R.Tharaniya / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி புத்தளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது. அங்கு, அந்த வீட்டில் விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 21 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் மற்றும் வெளிநாட்டு சிகரட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.



6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago