Mayu / 2024 நவம்பர் 07 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் புதன்கிழமை (06) தம்பகல்ல புலகஹலந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆறு கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஒப்பேகொட தம்பகல்ல ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவவுக்கமைய அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியதில் ஹெராயின் போதைப் பொருள் மீட்க்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபரும் ஹெரோயினுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago