Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை உவர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த இரு இளைஞர்கள் சனிக்கிழமை (28) ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வலையில் இருந்து பீப்பாய் ஒன்றை அகற்ற முற்பட்ட போது நீரில் விழுந்துள்ளார்.
தண்ணீரில் விழுந்த இளைஞரை காப்பாற்ற மற்றைய இளைஞரும் ஆற்றில் குதித்ததாகவும், இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இருவரும் மாத்தளை, கிவுல சுடுககவத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய சானக மதுஷங்க மற்றும் மாத்தளை களுதாவளை முதலாம் பத்தம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மெனுகா மதுஷங்க அபேசிங்க ஆகியோர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
9 hours ago