Janu / 2025 ஜனவரி 28 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு (கோணஹேன முகாம்) கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடவத்தை , பஹல கரகஹமுன பிரதேசத்தில் திங்கட்கிழமை (27) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 27 கிராம் 700 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை தன் உடமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
29 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
30 minute ago
37 minute ago