Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 06 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா ஏற்பாட்டில், ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டியை கொழும்பில் பெப்ரவரி மாதம் 22 திகதி நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகரும் தலைவருமான அனு குமரேசன் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அனு குமரேசன்,
கடந்த வருடம் இலங்கையின் 17 மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தார்கள். இதில் பலர் வெற்றிவாகை சூடியிருந்தார்கள். அத்துடன் இந்த போட்டி நிகழ்ச்சியின் மூலமாக போட்டியாளர்களுக்கு துறைசார் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் திறனாய்வினூடாக கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கப்படுவதோடு பணப்பரிசுகளையோ அல்லது வேறெந்த கவர்ச்சிகரமான பரிசுகளையோ காட்சிப்படுத்தாமல் முழுவதுமாக அவர்களின் திறமைகளையும் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, போட்டியாளர்களின் திறமைகளுக்கு ஒரு களமாகவும் நடாத்தப்படும் ஒரு தேசிய போட்டி நிகழ்வாகும் என்றார்...
மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபகரும், தலைவருமான அனு குமரேசனுடன் செயலாளர் வித்தியா நிரஞ்சன் மற்றும் பொருளாளர் சிதம்பரம் அஜித் ஆகியோர்களும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்ததுடன், அமைப்பின் நிர்வாக குழுவினர் மற்றும் கடந்தமுறை வெற்றியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை இலங்கையின் பல பாகங்களைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள் "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்காவினூடாக" கடந்த காலங்களில் சர்வதேச ரீதியாக அழகுக்கலை போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளதுடன் இதன் தலைவரான அனு குமரேசன் அண்மையில் "ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்" இல் அதிக ஒப்பனைக் கலைஞர்களை ஒன்று திரட்டி மிகக் குறுகிய நேரத்தில் கண் அலங்காரம் செய்து உலக சாதனைப் படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
5 hours ago
9 hours ago
01 May 2025