2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

ஓமான் தூதுவராக சஞ்சீவ டி அல்விஸை நியமிக்க அனுமதி

Editorial   / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூதுவர் ஒருவர், இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும்  நான்கு  நிறுவனத் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

 2025.08.06 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய, ஓமான் நாட்டுக்கான தூதுவராக விஜேசிங்க ஆரச்சிகே கபில சஞ்சீவ டி அல்விஸ்  நியமனத்துக்கு குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளராக எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. மந்திரிநாயக்கவின் நியமனத்துக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக திருமதி ஜே.எம். திலகா ஜயசுந்தரவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது. 

மேலும், இலங்கை வங்கியின் தலைவராக காவிந்த டி சொய்ஸா, வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவராக பிரியந்த வெதமுல்ல, டெவலபேர்ஸ் (லங்கா) லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராக பிரவீர் டி. சமரசிங்க மற்றும் மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தின் தலைவராக ஜயதிஸ்ஸ ஆனந்த பதிரகே ஆகியோரின் நியமனங்களுக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X