Editorial / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு 2020ஆம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய அதிதரிப்பை வழங்காமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு ஏற்றுக்கொண்டுள்ளதுடன், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அறிவித்தல் விடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று (13) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
சிரேஷ்ட சட்டத்தரணி சுனில் வட்டகல மூலம் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சாந்த ஜயவர்த்தன ஆஜராகி, பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு நீதி வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வாதம் செய்தார்.
இதையடுத்து இவ்வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதற்குத் தீர்மானித்த நீதிமன்றம், எதிர்வரும் 2022 ஜனவரி 21ஆம் திகதி வரை ஒத்திவைப்படுவதாகவும் அன்றைய தினம் பிரதிவாதிகளை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்குமாறும் அறிவித்தார்.
இவ்வழக்கின் பிரதிவாதிகளாக அமைச்சரவை அமைச்சர்களும், பொது நிர்வாக
அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு கொரோனா பெருந்தொற்று காரணமாக அடிக்கடி நீதிமன்றம் மூடப்பட்டமையால் பரிசீலனைக்கு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக ஓய்வூதியதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் உப தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவித்தார்.
மேற்படி ஓய்வூதியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இடை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் அரச ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago