Janu / 2026 ஜனவரி 13 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி, கண்டக்குளி கடல் பகுதியில் திங்கட்கிழமை (12) அன்று இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயாவின் கண்டக்குளி கடற்படைப் பிரிவினால், நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட இரண்டு படகுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற ஒரு லட்சத்து எட்டாயிரத்து நானூற்று எண்பது (108,480) மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மருந்து மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடல் வழியாக கடத்தல் உள்ளிட்ட இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை தொடர்ந்து பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்

14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026