Janu / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 1 கோடி 60 இலட்சம் பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஷ் போதை பொருளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தின் பயணப் பொதிகள் இறக்கும் பகுதியில் (லக்கேஜ் டிரக்) உள்ள கழிப்பறையில் இருந்து சனிக்கிழமை (20) அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
422 கிராம் "குஷ்" மற்றும் 1 கிலோ 262 கிராம் "ஹஷீஷ்" தனித்தனியாக பொதிசெய்யப்பட்டிருததாக தெரிவிக்கப்படுகிறது. செய்யப்பட்டிருந்தன.
விமான நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அதிகாலை 01.30 மணி அளவில் இதனை கண்டு, இது தொடர்பாக விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டீ.கே.ஜி. கபில

3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago