Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Janu / 2024 ஜூலை 31 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு முன்னால் உள்ள கலா ஓயா ஆற்றுக்கு குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வந்தனாகம, கலங்குட்டிய, கல்நேவ பகுதியைச் சேர்ந்த எச்.எம். வசந்த பிரியதர்ஷன (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
குறித்த நபர் உட்பட நால்வர் குளிப்பதற்கு கலா ஓயா ஆற்றிற்கு சென்றிருந்த நிலையில், அவர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாகவும் அங்கு இரண்டு குழுக்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த நபர் தவிர்ந்த ஏனையவர்கள் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவரை தேடி மீண்டும் கலா ஓயா ஆற்றிற்கு வந்துள்ளனர் .
இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்ததையடுத்து பொலிஸார் மற்றும் ஏனையவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது காணாமல் போன நபர் கலா ஓயா ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுவாங்குளம் பகுதியில் உள்ள சுற்றுலா பங்களாவை திருத்துவதற்காக வருகை தந்ததாகவும், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதவான் வசீம் ராஜா, சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல்ப்பட்டுள்ளது.
குறித்த சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வண்ணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
ரஸீன் ரஸ்மின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago