Janu / 2026 மார்ச் 18 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் பத்து கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பெறுமதியுடைய "குஷ்" போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கை விமான பயணிகள் இருவர் புதன்கிழமை(18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹக்மன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய வர்த்தகர் ஒருவரும் அகுணகொலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் செவிலியர் (Nursing) பயிற்சி பாடநெறியை பயிலும் 22 வயதுடைய மாணவி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் புதன்கிழமை(18) அதிகாலை 01.00 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த பயண பொதிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து, 08 பார்சல்களில் பொதி செய்யப்பட்டிருந்த 10 கிலோ 552 கிராம் எடையுடைய "குஷ்" போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவை பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
டி.கே.ஜி. கபில

44 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago