2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கொவிட் சடலங்கள் தொடர்பில் பிரதமர் அதிரடி அறிவிப்பு

Editorial   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள  பிரதமரின் அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்றது.

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு  பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் வைரஸ் சுமார் 36 நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது  பிரதமரிடம் அறிவித்தனர்.

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டிய  பிரதமர், சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு அங்கு வருகைத் தந்திருந்த முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில்  அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னிஆராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X