Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜூலை 15 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரூ.30 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கை இளைஞன் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு கைது செய்துள்ளனர்.
இவர் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொருத்தோட்டையை வசிப்பிடமாக கொண்ட 18 வயதுடைய இளைஞராவார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை(14) இரவு சுமார் 10:00 மணியளவில் அபுதாபியிலிருந்து EY-394 Etihad Airlines விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரது பைகளில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட "மான்செஸ்டர்". 30,000 வகையான சிகரெட்டுகள் அடங்கிய 150 சிகரெட் அட்டைப்பெட்டிகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், எதிர்வரும் புதன்கிழமை(24), இளைஞனுடன், வெளிநாட்டு உற்பத்தி சிகரெட்டுகளின் கையிருப்பு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,
டிகேஜி கபில
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago