Janu / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய, வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற பயணி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஓட்டுநர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை 12.45 மணி அளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன் அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்து"பிளாட்டினம்" வகை சிகரெட்டுகள் 28000 அடங்கிய 140 கார்ட்டூன் அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பயணி தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் புதன்கிழமை (10) அன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
டி.கே.ஜி.கபில

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .