Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 72 இலட்சம் ரூபா பெறுமதியான சீன தயாரிப்பு சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற சீன பிரஜை ஒருவர், வியாழக்கிழமை (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சீனாவின் ஷி ஜியேன் (Zhejiang) மாகாணத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.
குறித்த நபர் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான MH-179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தின், 'கிரீன் சேனல்' ஊடாக வெளியேற முயன்ற போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கொண்டு வந்த 4 பயண பொதிகளையும் சோதனையிட்டபோது, அதற்குள் சீனவில் தயாரிக்கப்பட்ட 7 வெவ்வேறு வகைகளை சேர்ந்த 48,000 சிகரெட்டுகள் அடங்கிய 240 சிகரெட் கார்ட்டூன் அட்டைப் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
டி.கே.ஜி. கபில

14 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
20 Apr 2026