Janu / 2026 மார்ச் 09 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 51 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்ட போது அதிலிருந்து "மென்செஸ்டர்" வகை 34,000 சிகரெட்டுகள் அடங்கிய 170 சிகரெட் கார்ட்டூ பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த விமானப் பயணி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 11ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
டி.கே.ஜி.கபில

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago