Nirosh / 2020 நவம்பர் 30 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணைகளில் தனது மருமகன் சட்டத்தரணி மில்ஹான் முஹம்மத் ஆஜராவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இடையீட்டு மனுதாரர் ஒருவரின் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி, சன்ஜீவ ஜயவர்தனவுடன் வழமையாக உதவியாளராகப் பணியாற்றும் நிலையில், சன்ஜீவ ஜயவர்தன,சுயதனிமைப்படுத்தலில் இருப்பது பற்றி அறிவிப்பதற்காகச் சென்ற சக சட்டத்தரணி யொருவரோடு, கடந்த வியாழக்கிழமை அவர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார்.
அதை தவிர, தனது சமூகத்தையும் சமயத்தையும் பாதிக்கக் கூடிய பிரஸ்தாப வழக்கில் தாம் ஆஜராவதில்லை என்பதில் சட்டத்தரணி மில்ஹான் முஹம்மத் உறுதியாக இருக்கிறார்.
அத்துடன், ஜனாஸாக்களுக்கு எரியூட்டும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக தாம் தொடர்ந்தும் கடுமையான நிலைப்பாட்டிலிருப்பதால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் விளைவாக, இதன் உண்மைத் தன்மைப் பற்றிய போதிய புரிதலின்றி, சிலரால் இந்த விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளமை வருந்தத்தக்கது என கட்சியின் தலைவர் குறிப்பிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளது.
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago