Janu / 2024 ஒக்டோபர் 20 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு , இலங்கைக்கு வந்ததன் நோக்கத்தை தெளிவுப்படுத்த தவறிய சந்தேகத்திற்கிடமான இரு வெளிநாட்டவர்கள், திருப்பி அனுப்பப்பட்டனர்.
குறித்த இருவரும் சீன பிரஜைகள் என தன்னை அடையாளப்படுத்தியுள்ளனர். அவர்களிடமிருந்த கடவுசீட்டில், சீனாவில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் அவர்கள் பிறந்த இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களிடம் கம்போடிய மற்றும் துருக்கிய அசல் கடவுசீட்டுகளும் இருந்துள்ளது.
மேலும் சீன அரசின் சட்டத்தின்படி, அந்நாட்டு மக்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க முடியாது, வேறு நாட்டின் குடியுரிமை பெற்றால், சீன அரசின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்பதால் இவர்கள் தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
36 வயது மற்றும் 37 வயதுடைய இருவரும் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து சனிக்கிழமை (19) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்து silk rout ஊடாக பணம் செலுத்தினர் இந்நிலையில் அவர்களிடம் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் எதற்காக இலங்கைக்கு வந்தீர்கள் என வினவியபோது அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.
சீனப் பிரஜைகள் தற்போது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பாரியளவில் கணினி குற்றங்கள் மற்றும் பணமோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருவதால், அவர்களை மீள் அனுப்பி வைத்த பின்னர். குடிவரவு அதிகாரிகளுக்கு அச்சுருத்தல் விடுத்து பல தொலைபேசி அழைப்புகளும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


2 minute ago
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
42 minute ago
51 minute ago