J.A. George / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை, மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று நீக்கியது.
மாத்தறை ப்ரௌன்ஸ் ஹீலில் உள்ள சுமார் ரூ. 66 மில்லியன் பெறுமதியான தென்னங்காணி கொள்வனவின்போது, நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.
நகர்த்தல் பத்திரமொன்றை சமர்ப்பித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனடிப்படையில் விடயங்களை ஆராயந்த நீதிமன்றம், பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு மாத கால வெளிநாட்டு பயணத்தடையை நீக்கி உத்தரவிட்டது.
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago