Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 10 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பரி. தோமா கனிஷ்ட பாடசாலையின் கலை கலாசார விழாவான கலை மதுரம் வியாழக் கிழமை (12) மாலை 5.01 மணிக்கு பம்பலப்பிட்டி, புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழிகள் திணைக்களத்தைச் சேர்ந்த கலாநிதி. கே. ரகுபரன் பிரதம அதிதியாகவும், பாடசாலை அதிபர் வண. பிதா. நிஹால் பெர்னான்டோ சிறப்பு அதிதியாகவும், கலந்து கொள்ளவுள்ளனர்.
பாடசாலையின் தமிழ் மன்றத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரம் 4 முதல் தரம் 11 வரையான மாணவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்படவுள்ளதுடன், இதர பாடசாலைகளின் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இந்த நிகழ்வில் இடம்பெறும்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பித்து, தமிழ்த்தாய் வாழ்த்து, புஷ்பாஞ்சலி வரவேற்பு நடனம், நாடகம், லோகித ஜீவன் நடனம், மெதடிஸ்ட் கல்லூரியின் பங்காரா நடனம், இசை நிகழ்வு, இந்து மகளிர் கல்லூரியின் நாட்டியாஞ்சலி நடன நிகழ்வு, மயிலின் அலசல் ஹாஸ்யம் நடனம், தேறக்க யாரையும் தேராது வில்லுப்பாட்டு, தாள வாத்தியம், பிஷப் கல்லூரியின் பாடல், கலப்பு இசைக் கச்சேரி, பழைய மாணவர்களின் பள்ளியம் நிகழ்ச்சி, தமிழ் முரசு முழங்கட்டும் நாட்டிய நிகழ்வு போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago