Janu / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையினர், திங்கட்கிழமை (27) அன்று கற்பிட்டி துடாவ கடற்கரை மற்றும் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 956 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு டிங்கி படகை கைப்பற்றியுள்ளனர்.
கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாததால், கடலிலும் கடலோரப் பகுதியிலும் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட நிலையிலேயே இவைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இருபது படகுகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்


20 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
4 hours ago