Janu / 2026 மார்ச் 31 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி, தலவில - எறும்புக்குடல் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 468 கிலோ கிராம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புத்தளம், எறும்புக்குடல் கடற்கரை பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான 'இலங்கை கடற்படை கப்பல் விஜய' (SLNS Vijaya) அதிகாரிகளினால் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைவிடப்பட்டிருந்த 15 பொதிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
குறித்த பொதிகளுக்குள் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் 468 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர். கடற்படையினரின் சுற்றிவளைப்பை அறிந்த கடத்தல்காரர்கள், இந்த பீடி இலைகளை கடற்கரையில் கைவிட்டு தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எம்.யூ.எம்.சனூன்

4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago