2026 மார்ச் 16, திங்கட்கிழமை

பெரியமடு சிறுபான்மை சமூகத்தின் ஒரு நாள் வாக்கும் 30 வருட பயணமும்

Editorial   / 2025 மே 26 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முபீன் மொஹமட் அகீல்

1990/10/28 அன்று நடந்த உள்ளூர் யுத்தத்தின் போது முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, தங்களின் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவசர அவசரமாக கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு புலம்பெயர்ந்து சென்று இற்றைக்கு 30 வருடங்கள் கடந்துவிட்டன.

1995 இல் முன்னாள் கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் அமைச்சரான காலஞ்சென்ற எம். எச். எம். அஷ்ரப் அவர்களினால் பாடசாலைக்கான ஐந்து கட்டிடங்களைப் பெற்று உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயம் என்ற பாடசாலை நிர்மானிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலான புலம்பெயர்ந்த மக்கள் தங்களது நிரந்தரக் குடியிருப்புளை புத்தளம் ஹூசைனியாபுரத்திலே உருவாக்கினர்.

பின்னர் 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா பண்டா​நாயக்க குமாதுங்க மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க ஆகியவர்களின் ஆட்சி காலத்தில் சமாதான உடன்படிக்கை ஒப்பந்தத்தின் பெயரில் மன்னார் வாழ் மக்கள் சொந்த மண்ணில் மறுபடியும் கால் பதிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

2003 - 2009 ஆகிய காலப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூர் அதிகார சபை தேர்தல்களின்போது புத்தளத்தில் குடிபெயர்ந்த மக்களுக்காக தேர்தல் அதிகாரிகளினால் தனியான வாக்கெடுப்பு நிலையங்கள் அக்கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்குகளும் எண்ணப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2009 தொடக்கம் 2019 வரையிலான காலப்பகுதிக்குள் இரண்டு ஜனாதிபதி தேர்தல்களும் இரண்டு பொது தேர்தர்களும் இரண்டு உள்ளூர் அதிகார சபை தேர்தல்களும், ஒரு மாகாண சபை தேர்தலும் நடைபெற்றன. இத்தேர்தல்களின் போது புலம்பெயர்ந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 90% மக்கள் தமது வாக்குரிமைகளினை நாள் முழுவதுமான ஒரு பயணத்தின் ஊடாக புத்தளம் சென்று தங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது 2018 ஆம் ஆண்டு உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக சுமார் 1800 க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு 40 பஸ்களும் அவர்களுக்கான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக சுமார் 800 க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு 20 பஸ்களும் சேவைகளில் இடப்பட்டது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் சுமார் 60 வாக்காளர்களுக்காக ஒரு பஸ் சேவையில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஏனெனில் 2020 ஆம் ஆண்டு அங்குள்ள உதவி தேர்தல் ஆணையாளரினால் கிராம உத்தியோகத்தர் ஊடாக மக்களின் விருப்பத்திற்கு புறம்பாக அவர்களினது வாக்காளர் பதிவுகளினை அகற்றி (அதாவது அங்குள்ள மக்களின் முறையற்ற வசிப்பிட நிலைமை மற்றும் வேலை என்பவற்றினை கருத்தில் கொண்டு) புத்தளத்திலேயே காணப்படுகின்றவர்களுக்கு இங்குள்ள மக்களுக்கான வாக்காளர் பதிவுகளில் இங்கேயே பதிவதற்கான பணிகளினை மேற்கொண்டனர்கள் என்பது ஆய்வுகளில் தெரியவந்தது.

ஆனால் தற்பொழுதும் பெரியமடு கிராமத்தில் 2009 அல்லது 2010 பின் இந்திய இயக்கங்கள் திருப்பி அனுப்பிய பின் தங்களது மீள் குடியமர்வுகளை மேற்கொண்டு தற்பொழுது 30% மக்கள் (சுமார் 380 குடும்பங்கள்) பெரியமாடுவில் வசிக்கின்றதாகவும் ஆய்வுகளின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் சிலர் தாம் பிறந்து வளர்ந்த மண்ணின் மகிமைக்காகவும் சிலர் வேலை நிமிர்த்தமும் வசிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.

அதேபோன்று மன்னார் மாவட்ட புலம்பெயர்வு மக்களில் 99% மக்கள் அதாவது 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புத்தளம் ஹூசைனியாபுரத்திலே தங்களது வாக்காளர் பதிவுகளினை பதிவு செய்து புத்தள வாக்காளர்களாக காணப்படுகின்றனர்.

இந்த ஹுசைனியாபுரம் ஆனது சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாக ஆய்வுகளின் மூலம் குறிப்பிடக் கூடியதாக உள்ளது.

மேற்குறித்த தகவல்கள் மற்றும் ஆய்வுகளின் முடிவில் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வின் பின்னர் தங்களது குடியிருப்புகளினை இங்கு அமைத்துக் கொண்டாலும் தங்களது தனி அல்லது அரச மற்றும் நிறுவன வேலைப் பளுக்களுக்கு  மத்தியிலும் தங்களது சொந்த அல்லது பிறந்த ஊரினை பார்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இந்த தேர்தல்கள் (ஒரு நாள்  வாக்குரிமை பயணமானது) காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் இங்குள்ள பலரது உறவுகள் மற்றும் நண்பர்கள் அங்கு வசிப்பதினாலும் அவர்களை  பார்ப்பதனாலும் மற்றும் அங்கு பிறந்து வளர்ந்தவர்களின் பொன் நினைவுகளினையும் மீட்டெடுப்பதற்கான இந்தப் பயணம் ஓர் சந்தர்ப்பமாக அமைகிறது.

ஆனால் பெரியமடு மற்றும் புலம்பெயர் மக்களின் தமது உறவுகள் அல்லது ஊருடனான தொடர்பாடல்கள் தேர்தல் அல்லாத காலத்தில் குறைவானதாகவே காணப்படுகிறது எனலாம்.

மூலம்:-FGD /கள ஆய்வு/ ஊர் தலைவர்கள் / இணையத்தள புள்ளி விபரவியல்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X