2026 மார்ச் 14, சனிக்கிழமை

பேருந்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் பலி

Janu   / 2026 மார்ச் 11 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேறுவலை, மஸ்ஸல சந்தியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றில் ஏறிய ஒருவர், பேருந்தின் மிதிப்பலகையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பேறுவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பேறுவலை, மஸ்ஸல, விகாரை வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய  கெருவாகே சந்திர குமார பெர்னாண்டோ என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (10) இரவு 10 மணியளவில் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில், பின்புறம் கதவு வழியாக ஏறிய அவர், படியிலேயே நின்று பயணித்தபோது பேருந்து சுமார் 100 மீற்றர் தூரம் சென்ற நிலையில் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் பேறுவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை  தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேறுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X