Mayu / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹிதியாவ பிரதேசத்தில், பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 43 வயதுடையவர் எனவும், அவர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்று (21) செவ்வாய்க்கிழமை மாலை குறித்த பகுதியில் பொலிஸ் குழுவினர் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது, அந்த வழியாக வந்த லொறி ஒன்றைச் சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 216,000 போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, லொறியில் பயணித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், போதை மாத்திரைகளும் லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட இந்த போதை மாத்திரைகள், கற்பிட்டி - நுரைச்சோலை பகுதியிலிருந்து விற்பனைக்காகக் கொழும்பு நோக்கிக் கொண்டு செல்லப்பட்டமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago