2025 மே 03, சனிக்கிழமை

முறைப்பாடு பொய்யானது

Mayu   / 2024 நவம்பர் 07 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகலங்கொடுவ அலுகல்கே மரியஅரவ பிரதேசத்தில் வசிக்கும் பதினொரு வயதுடைய தனது மகளை தந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்டுத்தியமை  தொடர்பான கிடைக்கப்பெற்ற முறைப்பாடு பொய்யானது என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 30-ம் திகதி தொலைபேசி மூலம் தந்தை தனது மகளை பலாத்காரம் செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, சிறுமியிடம் கேட்டபோது, ​​அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸார் சிறுமியை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தியபோது

அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாய் மூன்று பிள்ளைகளையும் விட்டுச் சென்ற நிலையில் தந்தை கூலி வேலை செய்து மூன்று பிள்ளைகளையும் பராமரித்து வந்துள்ளார்.

தம்பகல்ல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி ஜி.எஸ்.ஐ.ஜினகே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுமணசிறி குணதிலக்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X