Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Mayu / 2024 ஜூலை 31 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸுடன் கணவன் மனைவி பயணித்த மோட்டார் சைக்கிள், மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஸ்தலத்திலேயே செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இராஜாங்கனை, 15 யாய, மரகஹவ பகுதியைச் சேர்ந்த தினேஷா தில்ஹானி (34) என்ற திருமணமான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தனது கணவருடன் ராஜாங்கனையிலிருந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயேஇ அவர் உயிரிழந்துள்ளதோடு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கணவருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேருந்தை அதிவேகமாக செலுத்தியதாலும், பேருந்து சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ அறிக்கைக்காக நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரான சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சாரதி நொச்சியாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்னொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago