Janu / 2026 மார்ச் 10 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை, தல்பிட்டிய பாலத்திற்கு இணையாகவுள்ள ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த பிரித்தானிய தம்பதியினர் உட்பட நால்வர், ரயில் வருவதைக் கண்டு அதிர்ச்சியில் அங்குமிங்கும் ஓடியபோது விபத்துக்குள்ளாகினர்.
இவ்விபத்தில் 82 வயதுடைய அலன் பிரித்தானிய நாட்டவர் உயிரிழந்ததுடன், அவரது 80 வயதுடைய 47 வயதுடைய சுற்றுலா வழிகாட்டி மற்றும் அவரது 10 வயதுடைய மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் 82 வயதான அலன் (Allan) எனும் பிரித்தானிய நாட்டவராவார்.
வாத்துவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த இந்தப் பிரித்தானிய தம்பதியினர், குறித்த சுற்றுலா வழிகாட்டியுடன் சுமார் 25 வருடங்களாக நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தனர். மொரந்துடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா வழிகாட்டியின் வீட்டில் நடைபெறவிருந்த இரவு விருந்து ஒன்றில் கலந்துகொள்ளவும் இவர்கள் திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
கடற்கரைக்குச் சென்ற இவர்கள், பின்னர் தல்பிட்டிய பாலத்திற்கு அருகிலுள்ள ரயில் தண்டவாளப் பகுதிக்கு வந்து, பொல்கொட ஆற்றின் கிளை ஆறான அத்து ஓயாவின் அழகைப் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
களுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி ரயில் வந்துகொண்டிருந்ததைக் கண்ட அவர்கள், ஒருகணத்தில் நிலைகுலைந்து அங்குமிங்கும் ஓடியுள்ளனர். இதன்போது, சுற்றுலா வழிகாட்டி வெளிநாட்டுப் பெண்மணியையும் அவரது மகனையும் ஒருபுறமாகத் தள்ளி காப்பாற்ற முயன்ற போது அவர்களும் விபத்துக்குள்ளாகி அத்து ஓயாவிற்குள் விழுந்துள்ளனர்.
அதேநேரம், பிரித்தானியப் பிரஜையின் தலை ரயிலில் மோதியதுடன், அவர் பாலத்தின் கீழிருந்த கருங்கல் ஒன்றின் மீது தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago