Freelancer / 2021 ஜூலை 24 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அதிநவீன விவசாய மற்றும் ஹைடெக் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு சீனா ஒப்புக் கொண்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் டொக்டர் பாலித கோஹன, சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் பல்கலைக்கழகத்துக்கு கடந்த 19 ஆம் திகதி விஜயம் செய்தபோது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் சீனப் பெருஞ் சுவர் தொழில்துறை கழகத்தின் துணைத் தலைவரின் அழைப்பின் பேரில், டொக்டர் பாலித கோஹன, வுஹான் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார்
அங்கு துணைத் தலைவர் யாகின் சுய் தலைமையிலான பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பல்கலைக்கழகங்களின் குழு, அதிநவீன விவசாய மற்றும் ஹைடெக் பல்கலைக்கழகத்தை நிறுவு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
ஹூபே மாகாண ஆளுநர் ஷோங்ளின் வாங்குடன் இடம்பெற்ற முறையான சந்திப்பின் போது அவரால் ஒப்புதல் வழங்கப்பட்டதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago