Janu / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 4 கோடியே 50 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற மூவர் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24, 28 மற்றும் 30 வயதுடைய கொழும்பு, அவிசாவளை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள், சிகரெட்டுகளை துபாயில் வாங்கி, கத்தாரின் தோஹாவிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்
அவர்கள் கொண்டு வந்த 15 பைகளில் இருந்து 300,600 வெளிநாட்டுத் தயாரிப்பு "மான்செஸ்டர்" மற்றும் ''பிளாட்டினம் 07'' சிகரெட்டுகள் அடங்கிய 1,503 சிகரெட் அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
டி.கே.ஜி.கபில

4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago