2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

வேன் மோதி ஒருவர் பலி

Janu   / 2025 ஜூலை 01 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி ,வன்னி,முந்தல் பகுதியில் உள்ள வாகனங்கள் சேர்விஸ் நிலையத்தில் சேர்விஸ் பண்ணுவதற்காக வந்த வேன் சாரதியின் கவனக்குறைவு காரணமாக சேர்விஸ் நிலைய ஊழியர் ஒருவர் மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் இரு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் வேன் சாரதி கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .