2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டியவில் சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ )


சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின அனுஷ்டிப்பு நாவலப்பிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாவலப்பிட்டி இந்து மன்றமும் அகில இலங்கை இந்து சுயம் சேவா சங்கமும் இணைந்து இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தன.

இந்நிகழ்வினை முன்னிட்டு நாவலப்பிட்டி பிரதான நகரூடாக ஊர்வலம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நாவலப்பிட்டி கதிரேசன்  இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நாவலப்பிட்டி இந்து மன்றத்தின் தலைவர் ஆர்.ராஜேந்திரன், அகில இலங்கை இந்து சுயம் சேவா சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.விஜயபாலன் உட்பட பலர் உரையாற்றினர்.

அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .