2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

உலக நடன தின விழா -2012

Kogilavani   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக  நடன நிகழ்வை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை 'நர்த்தனாபிமானி' விருது வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு- 7 இல் அமைந்துள்ள கலாபவனத்தில் இடம்பெற்றது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், சிரேஷ்ட பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க, பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர்.

நடனம் பற்றிய புகைப்படக் கண்காட்சியும், சர்வதேச நடன மற்றும் நாட்டிய நாடக குறுந் திரைப்படங்களும் இதன்போது காண்பிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து மேலைத்தேய நடன கலைஞர் எம்.பி. குணதசார, கீழைத்தேய நடன கலைஞர் எடின் வீரசிங்க, சப்ரகமுவ நடனத்தில் பீ.எம். பபானிஸ் மற்றும் பாரத நாட்டிய கலைஞர் பத்மினி செல்வச்சந்திரகுமார் ஆகியோருக்கு விருதுகளும் பணப்பரிசில்களும் கலாசார கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க வழங்கி வைத்தார்.  (படங்கள்:- கித்சிறி டீ மெல்)








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .