Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிறிஸ்லைன் மற்றும் இவென்ட் என்டடெய்னர் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கொழும்பு ஓர்கிட் லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் 'சுப்பர் சிங்கர்-3' இசை நிகழ்ச்சி எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'சுப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் வெற்றிவாகை சூடிய நட்சத்திரங்கள் பல இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளன. எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
பூஜா, மாளவிகா, ஸ்ரீனிவாஸ், சந்தோஷ் ஆகிய பாடகர்களுடன் நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் பாடகியுமான திவ்யாவும் இம்மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
எம்.சிவக்குமாரின் அக்னி இசைக்குழு இந்நிகழ்வுக்கு இசை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago