2025 நவம்பர் 05, புதன்கிழமை

'ஆடல் உலகில் எனது சுவடுகள்'

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கலைஞர் வேல் ஆனந்தனின் 'ஆடல் உலகில் எனது சுவடுகள்' நூல் வெளியீடு, நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, யாழ்.திருமறைக்கலாமன்ற கலைத்தூது மண்டபத்தின் குருகோபிநாத் நினைவரங்கில் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராசா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரனும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், இலங்கை நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் மரியாம்பிள்ளை, வடக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரத்தினம் ஆகியோரும் கௌரவ விருந்தினராக இசைச் சித்தர் கண்ணனும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X