Sudharshini / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பிரதிக் கல்விப் பணிப்பாளர் பஸ்மில் எழுதிய 'இரண்டாம் உயிர்' கவிதை நூல் அறிமுக விழா, கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி மகரூக் கலையரங்கில் இன்று சனிக்கிழமை (27) காலை இடம்பெற்றது.
கவிஞரும் சட்டத்தரணியுமான எம்.சீ.எம் சபறுள்ளா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெப்பையும் கௌரவ அதிதிகளாக பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.நசுவர்ஹான், எம்.சீ.நசார், திருமதி இஸட்.எம்.எம்.முனவ்வரா நளீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிண்ணியா இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் முதற்; பிரதியை ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.சபறுல்லா மற்றும் கிண்ணியா அல்-அதான் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.அப்துல் அஸீஸ் ஆகியோர் பெற்றுகொண்டனர்.
இந்நிகழ்வில், கருத்துரையினை மாவட்ட நீதிமன்ற பதிவாளர் ஏ.எம்.எம்.நியாஸ், கவி வாழ்த்து கவிமணி அ.கௌரிதாசன் ஆகியோர் நிகழ்த்தினர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago