2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விருது விழா

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பில் இயங்கிவரும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் 7ஆவது தமிழியல் விருது –2015 விழா, நாளை மறுதினம்  செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் பாலுமகேந்திரா தமிழியல் அரங்கில் நடைபெறவுள்ளதாக அம்மையத்தின் மேலாளர் ஓ.கே.குணநாதன்  தெரிவித்தார்.

இதன்போது வழங்கப்படவுள்ள விருதுகள்,

2014

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது பெறும் மூத்த படைப்பாளி டாக்டர் ஜின்னா ஷரிர்த்தீன்.

தலா 15000 ரூபாய் பணத்துடன் வவுனியூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருது பெறும் மூத்த படைப்பாளிகள்
பேராசியரியர் வே.அந்தனிஜான் அழகரசன் (அமெரிக்கா)

த.கலாமணி (யாழ்ப்பாணம்)

நுணாவிலூர் கா.விஜயரெத்தினம் (லண்டன்)

ஆ.தங்கராசா (மட்டக்களப்பு)

நந்தினி சேவியர் (திருகோணமலை)

தமிழியல் வித்தகர் பட்டத்துடன் 25000 ரூபாய் பணமும் கல்விமான் வ.கனகசிங்கம் விருது பெறும் அயல் நாட்டுப் படைப்பாளி நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதி (தமிழ்நாடு இந்தியா)

10000 ரூபாய் பணத்துடன் அமிர்தகழி நாகமணி வாத்தியர் தமிழியல் விருது பெறும் இன நல்லுறவுக்காய் உழைத்த சிங்கள மொழிப் படைப்பாளி எஸ்.கொடகே (ஸ்தாபகர் கொடகே சாகித்திய விருது)

10000 ரூபாய் பணத்துடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருது பெறும் சிறந்த ஓவியர். என்.எஸ்.ஞானகுருபரன்.

10000 ரூபாய் பணத்துடன் பம்பைமடு கந்தையா-இரஞ்சிதமலர் விருது பெறும் சிறந்த வடிவமைப்பாளர் கே.எம்.மஸாஹிம் (மஸாஹி) (நூல் உயிரின் உண்மைகள்)

10000 ரூபாய் பணத்துடன் பம்பைமடு நாகலிங்கம்-நல்லம்மா தமிழில் விருது பெறும் சிறந்த சஞ்சிகை தாய் வீடு (கனடா)
சிறந்த நூலுக்கான தமிழியல் விருது 2013இல் வெளிவந்த தமிழியல் விருது பெறும் சிறந்த நூல்கள்

சிறுகதை:  10000 ரூபாய் பணத்துடன் திருமலை லூர்து அருளானந்தம் விருது கோ.சேனாதிராஜா எழுதிய குதிரைகளும் பறக்கும்.

நாவல்: 10000 ரூபாய் பணத்துடன் நாவலாசிரியர் பவளசுந்தரம்மா தமிழில் விருது தமிழ்க் கவி எழுதிய ஊழிக்காலம்.

கவிதை: 10000 ரூபாய் பணத்துடன் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருது கவிஞர் ஜெயசீலன் எழுதிய எழுதாத ஒருகவிதை, மற்றும். த.உருத்திரா எழுதிய ஆண்கோணி

சிறுவர் இலக்கியம்: 10000 ரூபாய் பணத்துடன் தகவம் வ.இராசையா தமிழியல் விருது சபா.சுப்பிரமணியம் எழுதிய உத்தமன் கதைகள்,

நாடகம்: 10000 ரூபாய் பணத்துடன் கலைஞர் ஓ.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது பாலுமகேந்திரா எழுதிய கதைநேரம் தொலைக்காட்சி நாடகங்கள்.

காவியம்: 10000 ரூபாய் பணத்துடன் கவிஞர் கல்லாறன் மு.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது டாக்டர் ஜின்னா சரிபுத்தீன் எழுதிய எல்லாள காவியம்.

சமயம்: 10000 ரூபாய் பணத்துடன் அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருது என்.கே.எஸ்.திருச்செல்வம் எழுதிய பாரம்பரியம்மிக்க கதிர்காம யாத்திரையும் கந்தாசாமிக் கடவுளின் புனித பூமியும்.

கட்டுரை: 10000 ரூபாய் பணத்துடன் செந்தமிழ் செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருது கே.ஜீ.மகாதேவன் எழுதிய நிஜங்களின் பதிவுகள்.

வரலாற்று ஆய்வு: 10000 ரூபாய் பணத்துடன் ஆலங்கேணி கணபதிப்பிள்ளை செல்லம்மா தமிழியல் விருது ஆ.ஜெயகாந்தன் எழுதிய நாகர் எழு வன்னி.

ஆய்வியல்: 10000 ரூபாய் பணத்துடன் வைத்தியாச்சாரி மீராசாஹிபு அஹமது தமிழியல் விருது எம்.சி.ரஸ்மீன் எழுதிய போர்க்கால சிங்கள இலக்கியங்கள்.

பயணக்கட்டுரை: 10000 ரூபாய் பணத்துடன் பதிவாளர் நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது ஞா.பாலச்சந்திரன் எழுதிய அங்கோர் உலகப் பெருங்கோயில்.

அறிவியல்: 10000 ரூபாய் பணத்துடன் வித்தியா கீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் எழுதிய சுதேச மருத்துவம் பற்றிய இலங்கைத் தமிழ் நூல்கள்.

2015

எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது பெறும் மூத்த படைப்பாளி செங்கை ஆழியான (க.குணராசா) யாழ்ப்பாணம்.

தலா 15000 ரூபாய் பணத்துடன் வவனியூர் ஸ்ரீ இராமகிருஸ்ணா கமலநாயகி தமிழியல் விருது பெறும் மூத்த படைப்பாளிகள்
மலரன்பன் (மாத்தளை)

கே.எஸ்.சிவகுமாரன் (கொழும்பு)

சிவ.தியாகராஜா (லண்டன்)

குணம்.யோசப் (மட்டக்களப்பு)

குழந்தை செபமாலை (மன்னார்)

10000 ரூபாய் பணத்துடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருது பெறும் சிறந்த ஓவியர் த.தனபாலன் மட்டக்களப்பு.
நூலுக்கான தமிழியல் விருது (( 2014 இல் வெளிவந்த தமிழியல் விருது பெறும் சிறந்த நூல்கள்)

நாவல் : 10000 ரூபாய் பணத்துடன் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது ஜீவகுமாரன் (டென்மார்க்) எழுதிய கடவுச்சீட்டு.

சிறுகதை : 10000 ரூபாய் பணத்துடன் அன்புமணி இரா.நாகலிங்கம் தமிழியல் விருது தெழிவத்தை யோசப் ( கொழும்பு) எழுதிய மீன்கள்.

கவிதை : 10000 ரூபாய் பணத்துடன் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருது அ.கௌரிதாசன் (திருமலை) எழுதிய ஒரு கவிதை எழுதிவிட ஆசை

வாழ்வியல் : 10000 ரூபாய் பணத்துடன் கல்விமான் க.கனகசிங்கம் தமிழியல் விருது அகளங்கள் (வவுனியா) எழுதிய வன்னிப்பிரதேச வயற்பண்பாடு.

புனைவுக் கட்டுரை : 10000 ரூபாய் பணத்துடன் வித்தியாகீர்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது ஆ.சி.கந்தராஜா (அவுஸ்ரேலியா) கறுத்த கொழும்பான்.

வரலாறு : 10000 ரூபாய் பணத்துடன் பம்பைமடு நாகலிங்கம் நல்லம்மா தமிழியல் விருது க.சபாரெத்தினம் ( மட்டக்களப்பு) எழுதிய ஆரையம்பதி மண்.

நாடகம் : 10000 ரூபாய் பணத்துடன் ஓ.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது ஏழுமலைப்பிள்ளை (கிளிநொச்சி) எழுதிய மகுடபங்கம்.

விமர்சனம் : 10000 ரூபாய் பணத்துடன் அமிர்தகழி என்.ஜே.இரத்தினராஜா தமிழியல் விருது செ.அன்புராஜா (மன்னார்) எழுதிய அதிர்வுகள். ஆகிய விருதுகளும் இதன்போது வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்தினை ம.புருசோத்மனும், வரவேற்புரையினை கனடா பாடுமீன் அமைப்பின் தம்பிராஜா வசந்தகுமாரும், அறிமுக உரையினை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் ஓ.கே.குணநாதனும், சிறப்புரைகளை கேரளா (இந்தியா) சங்கராச்சாரியார் பல்கலைக் கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியர் ஹ.பத்மநாதன், தமிழ்நாடு (இந்தியா) மூத்த நாவலாசிரியர் சின்னப்பபாரதி, டெல்லி (இந்தியா) ஜகவல்லால்நேரு பல்கலைக்கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியர் ஹ.பாலசுப்பிரமணியம் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .