Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 01 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
2009 – 2010ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரிய இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் முகமாக நடத்தப்படும் 'தேசிய விருது' வழங்கும் விழா, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அலரி மாளிககையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
அரச இசை விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிங்கள கலைஞர்கள் 12பேரும் தமிழ் மொழிமூல கலைஞர்கள் 8 பேரும் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் தமிழ்மொழிமூல சிறந்த பாடலாசிரியராக தம்பிரத்தினம் சகீஸ்கான் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். சிங்கள மொழிமூல சிறந்த பாடலாசிரியராக ரஜி வசந்த வெல்கம தெரிவுசெய்யப்பட்டார்.
தமிழ்மொழிமூல மெட்டிசைக்கான விருதினை சூரியன் எப்.எம். தட்டிச் சென்றது. சிங்கள மொழிமூல மெட்டிசைக்கான விருதினை தர்சன ருவன் திஸ்ஸநாயக பெற்றுக் கொண்டார்.
தமிழ் மொழிக்கான சிறந்த பாடகி நிரோசினி விஜயரத்தின, சிங்கள மொழிக்கான சிறந்த பாடகி தீபிகா பிரியதர்சனி பீரிஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தமிழ் மொழிமூல சிறந்த பாடகர் சாமித்தம்பி பிரதீப், சிங்கள மொழிமூல சிறந்த பாடகர் சுனில் எதிரிசிங்க.
இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட கலைஞர்களைப் படங்களில் காணலாம்.
THIVAAN Friday, 02 September 2011 04:50 AM
கலைஞர் பெயர் தர முடிமா ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago