Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 15 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவின் மாலை நிகழ்வுகள் நேற்று மாலை 3 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் அமைக்கப்பட்ட சவிரியான் லெம்பேட் அரங்கில் இடம்பெற்றன. இந்நிகழ்வுகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றன.
அத்துடன், நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி கலந்து கொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக், அமைச்சர் றிஸாட் பதீயுதினின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது, பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இரண்டாம் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் வித்துவான் ரச்மான் அரங்கில் ஆய்வரங்கு நிகழ்வு கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளன.
மாலை நிகழ்வுகள் மாலை 2.30 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் பென்ஜமின் செல்வம் புலவர் அரங்கில் கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025