Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், எம்.சி.அன்சார், ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை, கவிஞர் மன்சூர் ஏ.காதிரின் 'கனீமத்' கவிதைத் தொகுதி வெளியீடு சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் மார்பு நோய்ச் சிகிச்சைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.நௌஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம பிரதம அதிதியாகவும், விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், சிறப்பு அதிதியாக கலாபூஷணம் தேசமான்ய மௌலவி ஏ.ஸீ.எம்.புஹாரி, கவிஞர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நூலின் முதற்பிரதிகளை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமிருந்து கலாபூஷணம், தேசமான்ய மௌலவி ஏ.ஸீ.எம்.புஹாரி மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் ஆகியோர் பெற்றுக் கொண்டதுடன், நூல் பற்றிய உரைகளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், விரிவுரையாளர் எம்.ஐ.அப்துல் லதீப், கவிஞர்களான சோலைக்கிளி அதீக், எம்.ஐ. பௌஸ்தீன், எச்.எம்.பாறூக் ஆகியோர் நிகழ்த்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
34 minute ago
45 minute ago