2025 மே 01, வியாழக்கிழமை

மட். மியானி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கரோல்ஸ் கீதப்போட்டி

Kogilavani   / 2011 டிசெம்பர் 18 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மியானி நிறுவனம் நடத்திய கரோல்ஸ் வெற்றிக்கிண்ணத்திற்கான கரோல்ஸ் கீதப்போட்டி நேற்று சனிக்கிழமை தன்னாமுனை மியானி மண்டபத்தில் நடைபெற்றது.

மியானி நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை எஸ்.இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டு திருமலை மறைமாவட்ட துனை ஆயர் அருட் தந்தை பொன்னைய்யா ஜோசப் மற்றும் அருட்தந்தை ஸ்ரீதரன் சில்வஸ்ரர், மியானி சிறுவர் இல்ல இயக்கநர் அருட் தந்தை  ஆக்லன் அமலன் உட்பட அருட்தந்தையர்கள், பங்குத் தந்தையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் மட்டக்களப்பு, கல்லாறு, வாகரை, வாழைச்சேனை, உட்பட மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்தும், 16 அணிகள் இப்போட்டியில் பங்கு பற்றினர்.

இதன்போது, பெற்றோருக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .