2025 மே 01, வியாழக்கிழமை

'வாழ்வும் கோடும்' ஓவியக்கண்காட்சி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரின் ஏற்பாட்டில் 'வாழ்வும் கோடும்' என்னும் ஓவியக்கண்காட்சி பல்கலைகழக நுண்கலைப்பீட மண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை ஆரம்பமானது.

இரு நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை நுண்கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் எம்.செல்வராசா ஆரம்பித்து வைத்தார்.

பிரபல ஓவியர்களான கமலாவாசுகி, கிக்கோ, சுசிமன் நிர்மலவாசன் ஆகிய மூன்று ஓவியர்களினக்லும் வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  யுத்தம் மற்றும் அழிவுகளின் அவலங்கள், சமகால அநீதிகள், சமூகக்கொடுமைகள்
உள்ளிட்ட  பல்வேறு சம்பவங்களை பிரதிபலித்துக்காட்டும்  25 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .