2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் ஓவிய, சிற்பக் கண்காட்சி

Kogilavani   / 2012 மார்ச் 12 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்,எம்.சுக்ரி)
அரச ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு நாவற்குடா இந்துக்கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.

கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த ஓவிய, சிற்பக் கலை  கண்காட்சியினை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நவரூப ரஞ்சனி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மாவட்ட கலாசார இணைப்பாளர் மலர்ச் செல்வன், கலாசார உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்று காலை ஆரம்பமான இவ் ஓவியக் கண்காட்சி நாளை செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடையவுள்ளது. மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட 150க்கு மேற்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .