Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 மார்ச் 18 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
எழுத்தாளர் உமா வரதராஜனின், 'உமாவரதராஜன் கதைகள்' நூல் வெளியீடு கல்முனை கிறிஸ்த்தவ இல்ல மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கல்முனை கலை இலக்கிய நண்பர்களினால் ஏற்பாட்டில் திருமதி கமலாம்பிகை யோகிதராஜா தலைமையில் நடைபெற்ற இந்நூல் அறிமுக விழாவில், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவுத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத், அரசியல்
பிரமுகர்கள், எழுத்தாளர்கள், அரசாங்க அதிகாரிகள், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த கலை இலக்கிய வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது எஸ்.எல்.எம்.கனிபா, மன்சூர் ஏ. காதர், சோலைக்கிளி, விரிவுரையாளர் றமீஸ் அப்துல்லா, வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், எஸ்.அரசரத்தினம், கலாசர உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன், அனார் உட்பட பலரும் இங்கு உரையாற்றினர்.
இதன்போது அருட்சகோதரர் முனைவர் எஸ்.ஏ.ஐ.மத்தியு இந்நூலை வெளியிட்டு வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .