2025 மே 01, வியாழக்கிழமை

சகாயபுரம் சதா சகாய ஆலயத்தில் பெரிய வெள்ளி திருப்பாடுகள் காட்சிகள்

Kogilavani   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு கூழாவடி, சகாயபுரம் பிரதேசங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள்  பெரிய வெள்ளிக்கிழமையை நேற்று சிறப்பாக அனுஸ்டித்தனர்.

பூஜை வழிபாடுகள் நிறைவடைந்த பின் ஆலய முன்றலிலே  சாகாயபுர இளைஞர் யுவதிகள் ஒன்று இணைந்து யேசுவின் திருப்பாடுகளின் நற்செய்தி பகிர்வின் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

அருட் தந்தை இக்னேஸ் ஜோசப்  தனது அருளுரையின் போது, "இந்த நிகழ்வு மக்களுடைய மாற்றத்திற்கும் சிறப்பாக தங்களுடைய வாழ்விலே ஒருவரோடு ஒருவர் அன்புறவு கொண்டு வாழவும் பிறிவினைகள் பேதங்கள் விட்டொழித்து சமாதான ஒற்றுமையில் வாழ்வதற்கு இறைவன் அன்பு செய்வதற்காக வந்திருக்கிறார் என்பதை தெளிவு படுத்தும் நிகழ்வாகத்தான் கருதப்படுகின்றது. இந்த நாள் கிருஸ்தவ மக்களுக்கு ஒரு மீட்பளித்த நாளாகும்' என தெரிவித்தார்.














You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .