2025 மே 01, வியாழக்கிழமை

'தலை கோதிய தாய்மடி தேடி' கவிதை தொகுதி வெளியீடு

Kogilavani   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர் சுபபாலாவின் 'தலை கோதிய தாய்மடி தேடி'  கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை பகல் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.யோகராஜா  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி பி.சுவர்ணராஜ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நூலின் முதற் பிரதியை திருமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பெற்றுக்கொண்டார்.

நூல் அறிமுக உரையினை கல்முனை உளநல சங்கச் செயலாளரும் வைத்தியருமான பி.யு.டி.ரமேஸ் ஜெயக்குமாரும், ஆய்வுரையினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை டாக்டர் ஆர்.முரளீஸ்வரனும் நிகழ்த்தினர்.














You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .