2025 மே 02, வெள்ளிக்கிழமை

வட மாகாண தமிழ் மொழி தினப்போட்டியில் யாழ். மாவட்டம் முதலாமிடம்

Kogilavani   / 2012 மே 28 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

வடமாகாண தமிழ் மொழித்தின போட்டியில் யாழ்.மாவட்டம் 202 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தினை பெற்றுள்ளது.

இப்போட்டிகள் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில நேற்று முன்தினம் சனிக்கிழமை  ஆரம்பமானது.

இப்போட்டியில், யாழ். மாவட்டம் 202 புள்ளிகளையும் வவுனியா மாவட்டம் 113 புள்ளிகளையும் மன்னார் மாவட்டம் 69 புள்ளிகளையும் முல்லைத்தீவு மாவட்டம் 50 புள்ளிகளையும் கிளிநொச்சி மாவட்டம் 40 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டன.

இந்நிகழ்வில் வடமாகாண தமிழ் மொழித்தின சிறப்பு மலரான கவிந்தமிழ் எனும் நூலும் வெளியிடப்பட்டிருந்தது.

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற தமிழ் மொழித்தின விழாவில் வட மாகாண கல்வி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் வட மாகாண கல்விப் பணிப்பாளர் விக்னேஸ்வரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .