2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுகதை பயிற்சி பட்டறை

Super User   / 2012 ஜூன் 17 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதை பயிற்சி பட்டறை நேற்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட இந்த முழுநாள் பயிற்சிப் பட்டறையின் இறுதியில் இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வளவாலர்களாக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி வி.பற்பராசா, உள்ளூராட்சி மற்றும் மாகாண அமைச்சின் ஆய்வு உத்தியோகத்தர் சத்தார் எம்.பிர்தௌஸ், ஆசிரியர் ஆலோசகர் எஸ்.ருத்ரா, நிர்வாகப் பிரிவுக்கான தலைமை கிராம உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ.லாகிர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X