2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வேவ் டான்ஸ் ஸ்ரூடியோ கல்லூரி செங்கலடி கிளையின் ஆண்டு நிறைவு விழா

Suganthini Ratnam   / 2012 ஜூலை 02 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


இந்தியாவிலுள்ள வேவ் டான்ஸ் ஸ்ரூடியோ கல்லூரியின் செங்கலடி கிளையின் முதலாவது ஆண்டு நிறைவு விழா மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

வேவ் டான்ஸ் ஸ்ரூடியோ கல்லூரியின் செங்கலடி கிளையின் பொறுப்பாளர் எஸ்.கிருஷ்ணகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வேவ் டான்ஸ் ஸ்ரூடியோ கல்லூரியின் செங்கலடி கிளையில் ஒரு வருட பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வேவ் டான்ஸ் ஸ்ரூடியோ கல்லூரியை அமைத்து அளப்பரிய சேவையாற்றிவரும் தென்னிந்திய, மட்டக்களப்பு கிளை பொறுப்பாளர் ஆகியோர் மீள்குடியேற்ற பிரதியமைச்சரால் கௌரவிக்கப்பட்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .