2025 நவம்பர் 22, சனிக்கிழமை

அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் நூல் வெளியீடு

Super User   / 2012 ஜூலை 03 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (அறபுலகச் சிறுகதைகள்) நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னா ஷரிபுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை அயாஸ் அலி அஷ்ஃரப் செய்ததுடன் நூல் அறிமுகத்தினை சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா நடத்தினார்.

அத்துடன் நூல் எனது பார்வையில் என்று தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.இராகுபரன் நடாத்தியதுடன் எனது பார்வையில் நூல் என்று பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை தலைவர் எம்.எஸ்.எம்.அனஸ் நடாத்தியதுடன் ஏற்புரையை நூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் நிகழ்த்தினார்.

நிகழ்ச்சித் தொகுப்பினை கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் நடாத்திய நிலையில் இந்நிகழ்வில் இலங்கைக்கான மொறீஷியஸ் நாட்டின் கௌரவத் தூதுவர் ரீ.ஈஸ்வரன், சிறப்பு அதிதியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் பாத்திமா முஸப்பிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X